கேஜிஎப் 2 வெளிவந்து 3 ஆண்டுகள்.. உலகளவில் இப்படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
கேஜிஎப் 2
கன்னட திரையுலகை உலகளவில் கொண்டு சேர்த்த திரைப்படம் என்றால் அது கேஜிஎப் தான். குறிப்பாக கேஜிஎப் 2 திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு உயிர் கொடுத்ததே இவருடைய இசை தான். மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மொத்த வசூல்
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் தான் கேஜிஎப் 2 திரைப்படம் வெளிவந்தது. 3 ஆண்டுகளை கடந்திருக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா. உலகளவில் இப்படம் ரூ. 1250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் டாப் 5ல் இப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
