எந்த படம் நன்றாக ஓடுகிறது ! பீஸ்ட் VS KGF 2 - உண்மையை சொன்ன சினிமா பிரமுகர்..
பீஸ்ட் VS KGF 2
தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியானது. ஆனால் அப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. வரும் நாட்களில் பீஸ்ட் படத்தை திரையரங்கில் தூக்கும் நிலைக்கு வந்துவிடும் என தகவல் பரவி வருகிறது.
அதேசமயம் KGF 2 திரைப்படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரிய வரவேற்பபை பெற்று வருகிறது. விஜய் படத்திற்கே டப் கொடுக்கும் அளவு KGF 2 திரைப்படம் சிறந்த விமர்சனங்களுடன் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகள் அதிகரிப்பு
இந்நிலையில் முக்கிய சினிமா பிரமுகரான திருப்பூர் சுப்பிரமணியன் தற்போது இந்த இரண்டு படங்கள் நிலவரம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதால், ஒரு வாரம் வரை அந்த ஒப்பந்தமே செல்லும், ஒரு வாரத்திற்கு பிறகே அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்து தெரியவரும்.
KGF 2 படத்திற்கு ஏற்கனவே 350 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்! இப்படியா சொன்னார்