வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்.. வெறித்தனமாக வெளிவந்த கே.ஜி.எஃப் 3 அறிவிப்பு

By Kathick Apr 14, 2023 07:10 AM GMT
Report

கே.ஜி.எஃப்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்தது.

முதல் பாகத்தை விட மாபெரும் வெற்றியடைந்த கே.ஜி.எஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் இதுவரை கன்னட திரையுலகம் கண்டிராத வசூல் சாதனையை படைத்தது. குறிப்பாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே சுமா ரூ. 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது.

வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்.. வெறித்தனமாக வெளிவந்த கே.ஜி.எஃப் 3 அறிவிப்பு | Kgf 3 Announcement

கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதியில் கே.ஜி.எஃப் 3 படத்திற்காக ஹின்ட் ஒன்றை இயக்குனர் கொடுத்திருப்பார். இதனால் கண்டிப்பாக கே.ஜி.எஃப் 3 வெளிவரும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

கே.ஜி.எஃப் 3

இந்நிலையில், இன்றுடன் கே.ஜி.எஃப் 2 வெளிவந்த ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், அதை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்.. வெறித்தனமாக வெளிவந்த கே.ஜி.எஃப் 3 அறிவிப்பு | Kgf 3 Announcement

இந்த வீடியோவின் இறுதியில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கே.ஜி.எஃப் 3 படத்திற்கான அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

ருத்ரன் திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US