உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் கே.ஜி.எஃப் யாஷ்.. லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் யாஷ்
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் இருந்து இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரமாக மாறியுள்ளார் கே.ஜி.எஃப் யாஷ்.
குறிப்பாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தான் நடிகர் யாஷ்-க்கு இந்தியளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. உலகளவில் ரூ. 1250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எஃப் 2 கன்னட திரையுலகை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் நடிக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
யாஷின் புதிய படம்
இந்நிலையில் லேட்டஸ்ட்டாக வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் உண்மை சம்பவத்தை மையாக வைத்து உருவாகும் படத்தில் யாஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 1986ல் நடக்கும் கதையாக இப்படத்தை வடிவமைத்துள்ளார்களாம்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் தங்கமணி எனும் இடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தான் கதையாக எடுக்கவுள்ளார்களாம். இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
