மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆருக்காக இரவும் பகலும் அதை செய்வேன்.. KGF பட நடிகை ஸ்ரீநிதி ஓபன் டாக்!
ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. பின் விக்ரமுடன் இணைந்து கோப்ரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த ஆண்டு ஹிட் 3 என்ற மாபெரும் வெற்றிப்படத்தை நாணியுடன் இணைந்து கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டியும் ஒருவர். தற்போது இவர் நடிப்பில் தெலுசு கடா என்ற படம் வெளியாக உள்ளது.
ஓபன் டாக்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகை ஸ்ரீநிதியிடம் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நான் ஏன் அந்த வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும்? இரண்டு படங்களுக்கும் தேதிகளை ஒதுக்கி இரவும் பகலும் வேலை பார்ப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.