கேஜிஎப் பட புகழ் நடிகர் மரணம்.. சிகிச்சைக்கு ரூ.70 லட்சம் செலவு செய்தும் உயிர் பிரிந்தது
இந்திய அளவில் ஹிட் ஆகி அதிகம் பேசப்பட்ட கேஜிஎப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் ஹரிஷ் ராய்.
55 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரிஷ் ராய் தனது சிகிச்சைக்காக 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என முன்பு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம். மொத்தம் 17 முதல் 20 ஊசி வரை போட வேண்டி இருக்கும் என மருத்துவர்கள் சொன்னதாக அவர் கூறி இருந்தார்.
தற்போது சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
