KGF பட புகழ் நடிகர் ஹரிஷ் ராயா இது, உடல் மெலிந்து ஆளே மாறிவிட்டாரே... என்ன ஆனது, ஷாக்கிங் போட்டோ
கேஜிஎஃப் படம்
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎஃப்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
இந்தப் படத்தின் 2ம் பாகம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
பிரபல நடிகர்
இந்த படத்தில் சாச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தான் நடிகர் ஹரிஷ் ராய்.
கன்னட நடிகரான இவர் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஓம் திரைப்படத்தில் டான் ராய் என்ற வேடத்தில் நடித்தார்.
கன்னட சினிமாவில் பிரபலமான இவர் KGF மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது இவர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.
ஹரிஷ் ராய் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் பாதிப்பால் உடல் மெலிந்து வயிறு மட்டும் வீங்கி காணப்படுகிறாராம். 63 நாட்களுக்கு 3 ஊசிகள் செலுத்த வேண்டுமாம், ஒரு ஊசி ரூ. 3.55 லட்சமாம்.