கே.ஜி.எஃப், காந்தாரா படங்களின் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான லாபம்.. தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
கே.ஜி.எஃப் 2 - காந்தாரா
கடந்த ஆண்டு வெளிவந்து வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்த திரைப்படங்கள் கே.ஜி.எஃப் 2 மற்றும் காந்தாரா.
இதில் கே.ஜி.எஃப் 2 ரூ. 1500 கோடியை கடந்து வசூல் செய்த நிலையில் காந்தாரா ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த இரு திரைப்படங்களை ஓம்பாலே பிலிம்ஸ் தயாரித்தனர்.
இந்த தயாரிப்பு நிறுவனம் கே.ஜி.எஃப் 2 படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காந்தாரா படத்தின் மீது கொஞ்சம் கூட வைக்கவில்லையாம்.
அதிரடி முடிவு
கண்டிப்பாக காந்தாரா திரைப்படம் தோல்வியை தழுவி விடும் என்று தான் எண்ணினார்களாம். ஆனால், அவர்கள் நினைத்ததை பொய்யாக்கி வசூல் சாதனை படைத்தது காந்தாரா.
இதனால் ஓம்பாலே பிலிம்ஸ் அதிரடியாக ஒரு முடிவு செய்துள்ளாராம். 100 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ள ஓம்பாலே பிலிம்ஸ் அதில் ஏழை எளியோர் இலவசமாக படிக்க இலவச பள்ளிக்கூடம் கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரு திரைப்படங்கள் வசூல் எண்ணிக்கை தான் இவர்களை இப்படியொரு முடிவு எடுக்க வைத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
மெர்சல் படத்தை தூக்கி சாப்பிட்ட வாரிசு.. ஆனாலும் தயாரிப்பாளருக்கு இதுவரை லாபம் வரவில்லை