KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் தளபதி விஜய்யின் தீவிர ரசிகரா !
பார்வையை மாற்றிய KGF
சமீப காலமாக கன்னட திரையுலகம் இந்தளவு பிரபலமாக முக்கிய காரணமாக இருந்ததே KGF திரைப்படம் தான்.
அப்படம் இந்தியளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ள நிலையில், கன்னட திரைப்படங்களின் மீதான பார்வையையும் மாற்றியுள்ளது.
அப்படியான KGF திரைப்படத்தை இயக்கியவர் தான் பிரஷாந்த் நீல், வரும் 14 ஆம் தேதி KGF 2 வெளியாகவுள்ளது. அதன் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி பேராதரவை பெற்றுள்ளது.

இயக்குனர் பிரஷாந்த் நீல்
மேலும் KGF படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் பிரபாஸின் சலார் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதனால் தற்போது இந்தியளவில் அறியபடும் மிக முக்கிய இயக்குனராகியுள்ளார் பிரஷாந்த் நீல்.
இந்நிலையில் நேற்று பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் KGF 2 ட்ரைலர் குறித்து பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிரஷாந்த் நீல், விஜய்யை பெரிய திரையில் காண காத்திருக்க முடியவில்லை, நான் எப்போதும் பார்ப்பதை போல. பீஸ்ட் படத்திற்காக வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தற்போது ரசிகர்கள் பிரஷாந்த் நீல் பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது குறித்து பதிவிட்டு இருந்ததை புகைப்படத்துடன் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு பின் தளபதி விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி ! சன் டிவி-ன் மாஸ்டர் பிளான்..