பாகுபலி படத்திற்கு பிறகு KGF 2 செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட செய்யவில்லையா?
பிரகாஷ் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னட சினிமாவில் தயாரான ஒரு திரைப்படம் KGF. இப்படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து படக்குழு இரண்டாவது பாகத்தையும் எடுத்தார்கள்.
அப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது.
KGF 2 செய்யும் வசூல்
முதல் வார முடிவில் அதிகம் வசூலித்த படங்களில் இப்படம் உலகம் முழுவதிலும் 2வது இடத்தை பிடித்து பெரிய சாதனை செய்துள்ளார்.
இதுவரை படம் ரூ. 550 கோடிக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது.
சென்னையிலும் பீஸ்ட்டை தாண்டி KGF 2 படம் தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
KGF 2 செய்த சாதனை
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் திரையிடுவதில் நிறைய சாதனைகள் செய்தது. அப்படி வார முதல் திங்கட்கிழமைகளிலும் பாகுபலி படத்திற்கு பல திரையரங்குகளில் ஸ்பெஷல் ஷோக்கள் எல்லாம் இருந்தது.
அப்படி இப்போது பாகுபலி படத்திற்கு பிறகு திங்கட்கிழமைகளிலும் KGF 2 படத்திற்கு ஸ்பெஷல் ஷோ எல்லாம் இருக்கிறதாம். பாகுபலி படத்திற்கு பிறகு வார நாட்களிலும் ஸ்பெஷல் ஷோக்கள் இருப்பது இந்த படத்திற்கு தானாம்.
இந்த தகவல் வெற்றி திரையரங்க உரிமையாளர் கௌதம் அவர்களே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
After #Baahubali2 , a Housefull Monday morning Spl show for an other language film ? #RockyBhai jus rocking at BO #KGF2 #Vettri
— Rakesh Gowthaman (@VettriTheatres) April 18, 2022
விஜய்யின் பீஸ்ட் படம் 5 நாளில் தமிழகத்தில் இவ்வளவு வசூல்- குறைந்ததா?