சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் கே.ஜி.எப் படத்தின் முக்கிய பிரபலம் ! யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..
சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா, இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்றுவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடைசியாக வெளியான ஜெய் பீம், விக்ரம், ராக்கெட்ரி உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமான ரொலக்ஸ் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழ் நடிகர்களில் இப்போது சிறந்த லைன் அப் வைத்துள்ளவர் என்றால் அது சூர்யா தான். வெற்றிமாறன், சுதா கொங்கரா, ரவிக்குமார் என தொடர்ந்து சூர்யா முக்கிய நடிகர்களுடன் பணியாற்ற இருக்கிறார்.
கே.ஜி.எப் இசையமைபாளர்
இந்நிலையில் சூர்யா லைன் அப்-ல் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா, இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. மேலும் UV கிரியெஷன்ஸ் தயாரிக்கும் அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது என சொல்லப்பட்டது.
இதற்கிடையே தற்போது சிவா - சூர்யா திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தகவல் பரவி வருகிறது. அதன்படி அப்படத்தில் அனிருத் மற்றும் கே.ஜி.எப் படத்தின் இசையமைபாளர் Ravi Basrur உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி.. வெளிவந்த சூப்பர் அப்டேட்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
