விஜய்யின் இன்னொரு கோட்டையிலும் ராக்கி பாய் செம வசூல் வேட்டை- பீஸ்ட்டை தோற்கடித்த Kgf 2
கடந்த ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட், 14ம் தேதி யஷ் நடித்த Kgf 2 படங்கள் வெளியாகி இருந்தன. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்ப்பார்ப்பை பீஸ்ட் பூர்த்தி செய்யவில்லை, இப்போது ராக்கி பாய் தான் கலக்கி வருகிறார்.
விஜய் படத்தை விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் படக்குழுவுடன் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார், யஷ் படத்தின் வெற்றியையும் கொண்டாடிவிட்டார்.
தற்போது நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தான் மாறிக்கொண்டே வருகிறது.

மலேசியா பாக்ஸ் ஆபிஸ்
விஜய்யின் படங்கள் தமிழ்நாடு, கேரளாவை தாண்டி மலேசியாவிலும் நல்ல வரவேற்பு பெறும். ஆனால் இந்த முறை பீஸ்ட் படத்திற்கு அங்கேயும் சரியான வரவேற்பு இல்லை.
அங்கும் இப்போது ராக்கி பாய் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.
மலேசியாவில் Kgf 2 படம் அங்குள்ள கரன்சி விவரப்படி 8 மில்லியன் பெற்றுள்ளதாம், ஆனால் விஜய்யின் பீஸ்ட் 6.2 மில்லியன் தான் பெற்றுள்ளது. விஜய்யின் இன்னொரு கோட்டையிலும் ராக்கி பாய் கலக்கி வருகிறார்.
பீஸ்ட் 200 கோடி வசூல் உண்மையா...உடைத்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்