குஷ்புவுக்கு இளம் வயதில் பாலியல் தொல்லை கொடுத்த அப்பா! - அதிர்ச்சி தகவல்
குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் தான் குஷ்பு. சினிமாவுக்கு பின் சின்னத்திரை மற்றும் அரசியல் என களமிறங்கி அதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் National Commission for Women அமைப்பின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அந்த பதவி கிடைத்ததற்காக பிரதமர் மோடிக்கு குஷ்பு ட்விட்டரில் நன்றி கூறி இருந்தார்.
பாலியல் தொல்லை கொடுத்த அப்பா
இந்நிலையில் குஷ்பு ஒரு பேட்டியில் தான் இளம் வயதில் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசி இருக்கிறார். "8 வயதில் இருக்கும்போதே என் அப்பா எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் அதை எதிர்த்து பேச 15 வயதில் தான் எனக்கு தைரியம் வந்தது."
"நான் சொன்னால் என் அம்மா கூட என்னை நம்ப மாட்டார் என்கிற பயம் எனக்கு இருந்தது. நான் அப்பாவுக்கு எதிராக பேசியதால் அவர் நான் 16 வயது இருக்கும்போது வீட்டை விட்டு சென்றுவிட்டார். அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்தோம்" என குஷ்பு கூறி இருக்கிறார்.
குஷ்பு கூறி இருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய்யை முந்திய ஜோதிகா.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா