கிங் ஆப் கொத்தா திரை விமர்சனம்
மலையாள சினிமாக்களின் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக தென்னிந்தியா முழுவதும் இருந்து வருகிறது. இந்த அலைக்கு முக்கிய காரணங்களில் துல்கர் சல்மானும் ஒருவர், அவர் நடிப்பில் வெளிவந்துள்ள கிங் ஆப் கொத்தா படம் எப்படி? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கொத்தா என்ற பகுதியை பல வருடங்களாக மாறி, மாறி சில கேங்ஸ்டர்கள் ஆண்டு வருகின்றனர். அது ஒரு நாள் கண்ணன் பாய்(டான்ஸிங் ரோஸ்) கையில் வருகிறது. அவர் வந்த பிறகு போதை கலாச்சாரம் கொத்தாவில் தலை விரித்து ஆடுகிறது.
இதை போலிஸாக வரும் பிரசன்னாவால் கூட அடக்க முடியாமல் இருக்க, பிறகு தான் ஒரு ப்ளாஸ்பேக் ஓபன் ஆகி, கொத்தா இதற்கு முன் ராஜு(துல்கர்) கையில் இருக்க அவருடைய நண்பராக இருந்தவர் தான் இந்த கண்ணன்.
பல கட்ட மோதல், காதல், துரோகத்தால் துல்கர் கொத்தாவை விட்டே செல்ல, கண்ணன் அங்கு தலையெடுக்க, இதை அடக்க பிரசன்னா மீண்டும் துல்கர் சல்மானை கொத்தாவிற்கு வர வைக்கிறார், பிறகு கொத்தா யாருக்கு சொந்தமானது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
துல்கர் சல்மான் முதன் முதலாக கேங்ஸ்டராக ஒரு முழு நீளப்படத்தில் நடித்துள்ளார், கே ஜி எப் போல் அவரை காட்டுவதற்கு பில்டப் -களுடன் அரை மணி நேரம் ஆகிறது, அதன் பின் அந்த கொத்தா ராஜா துல்கர் எப்படி என்று பார்த்தால் எதோ குத்துபட்டு கொத்தாவை விட்டு வெளியேறினால் பரவாயில்லை, காதல் தோல்வி, நண்பன் துரோகம் என்று அழுதுக்கொண்டு கொத்தாவை விட்டு வெளியேறுகிறார், அங்கையே ராஜு பாய் கதாபாத்திரம் சிதைந்து விட்டது.
படத்தில் பரபரப்பு எனது துளிக்கூட இல்லை, அங்கங்கே டுவிஸ்ட் என்று ஒன்றை சொல்கிறார்கள், அதுவும் படத்திற்கு எந்த ஒரு விறுவிறுப்பு ஆர்வத்தையும் கூட்ட வில்லை.
சிறிது நேரம் வந்தாலும் ரஞ்சித் பாய் ஆக வருபவர் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது, கண்ணன் பாயாக நம்ம டான்ஸிங் ரோஸ் சபீர், நன்றாக நடித்துள்ளார்.
ஆனால், துல்கரை எதிர்க்கும் போது அவருக்கு ஒரு பெரிய அடியை கொடுத்தால் தானே, அவர் மீண்டு வரும் போது ஹீரோயிசம் தெறிக்கும்.
துல்கர் 1000 பேரை அனுப்பினால் கூட கத்தியால் குத்திவிட்டு இரத்த கரையுடன் 'இது கொத்தாடா' என்று பன்ச் பேசுகிறார். இதனாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை, எப்டியும் ஹீரோ ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் டெக்கனிக்கல் விஷயங்கள் தான், அதிலும் பின்னணி இசை மிகப்பிரமாதம், இந்த படத்தை பார்க்க ஒரு காரணம் சொல்லியே ஆகவேண்டும் என்றால் இசை மட்டும் தான்.
க்ளாப்ஸ்
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு.
ஸ்டெண்ட் காட்சிகள் ராவ்-ஆக இருந்தது.
பல்ப்ஸ்
விறுவிறுப்பு மற்றும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.
மொத்ததில் படத்தில் பல இடங்களிலும் கத்திகுத்துகளாகவே இருக்க, அதில் ஒரு குத்து ஆடியன்ஸ் மீதும் விழுகிறது.
வில்லன் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?- வைரல் போட்டோ