4 வயது வித்தியாசம்.. விமர்சித்தவர்களுக்கு பதில் கொடுத்த கிஷோர், ப்ரீத்தி
திருமணம்
பசங்க, கோலி சோடா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் நடிகர் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர்களது வயது வித்தியாசம் பற்றிய பேச்சும் அதிகம் எழுந்திருக்கிறது. ப்ரீத்தி கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதால் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது.
பதிலடி
இந்நிலையில் தற்போது கிஷோர் மற்றும் ப்ரீத்தி ஜோடி அளித்திருக்கும் பேட்டியில் 'வயது' பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றனர்.
வயது ஒரு நம்பர் அவ்ளோ தான் என ப்ரீத்தி கூறி இருக்கிறார். வயது வித்தியாசம் பற்றி கமெண்ட் செய்யும் ஒரு பையன், இப்படி ஒரு பெண் அவனுக்கு கிடைத்து இருந்தால் நிச்சயம் அந்த கமெண்ட் சொல்லி இருக்க மாட்டான் என கிஷோர் கூறி இருக்கிறார்.
வயது வித்யாசம் பற்றி இரண்டு பேரின் வீட்டிலும் பிரச்சனை எழவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
விஜய்யின் ரூட்டை பின்பற்றும் சிவகார்த்திகேயன்.. லேட்டஸ்ட் தகவல்