கிழக்கு வாசல் சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பு ஏன் வரவில்லை- ரேஷ்மாவிற்கு இப்படியொரு பிரச்சனையா?
கிழக்கு வாசல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் கிழக்கு வாசல்.
ராதிகாவின் ராடான் நிறுவனம் முதன்முதலில் விஜய் டிவி தயாரித்த ஒரு தொடர். இந்த தொடரில் விஜய்யின் அப்பா சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர்.
விறுவிறுப்பு குறையாமல் சீரியல் இருந்தாலும் சரியான டிஆர்பியை பெறவில்லை.
ரேஷ்மா விளக்கம்
பெரிய அளவில் டிஆர்பி வராததால் தொடரை சீரியல் குழு முடித்துள்ளனர்.
அண்மையில் கடைசி நாள் படப்பிடிப்பும் முடிந்துள்ளது, ஆனால் தொடரின் முக்கிய நாயகியான ரேஷ்மா வரவில்லை.
இதுகுறித்து அவர், எனக்கு ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லை. அதனால் தான் என்னால் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், இந்த சீரியலில் நடித்த என் அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என்று பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.