கொட்டுக்காளி திரை விமர்சனம்!!
கொட்டுக்காளி
தமிழ் சினிமாவில் எப்போதாவது உண்மைக்கு மிக நெருக்கமான படைப்புக்கள் வரும், அப்படி கூழாங்கல் படத்தின் மூலம் பல விருதுகளை வாங்கி குவித்த வினோத் ராஜ்-ன் அடுத்த படைப்பான கொட்டுக்காளி எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
அண்ணபென் கல்லூரியில் யாரையோ காதலித்து அது வீட்டிற்கு தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. சூரி அண்ணபென்-யை திருமணம் செய்ய வேண்டும் என்று சிறு வயதிலிருந்து காத்திருக்கிறார்.
இந்நிலையில் அண்ணபென்-யை ஒரு சாமியாரிடம் அழைத்து சென்று அவரை சரி செய்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இதற்காக சூரி குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்கள் கிளம்ப இந்த பயணம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் ஆரம்பத்திலேயே அண்ணபென் அம்மா சாமி கும்பிட்டு விபூதி எடுத்து வரும் கட்சியே இது சாதரண படமில்லை, விருதுகாகவே செதுக்கப்பட்ட படம் என்பது தெரிகிறது.
அதன் படியே ஒரு ஷேர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு இவர்கள் செய்யும் பயணம் யதார்த்தத்தின் உச்சம், அதிலும் ஒரு காட்சியில் சூரி கண்ணில் பூச்சி விழ, அதை அவருடைய தங்கை நாக்கில் எடுப்பது என இப்படியெல்லாம் எடுக்க முடியுமா என்று மிரள வைக்கின்றனர்.
அத்தனை பேரும் பதட்டத்தில் இருக்க, இருவர் மட்டும் ஒயின்சாப் தேடி அலைவது என டிபிக்கள் ஊர் காரர்களை கண் முன் கொண்டு வந்துள்ளனர். ஆட்டோவில் வரும் சிறுவன் அத்தனை சண்டையில் வண்டியில் உள்ள ஹார்ன் அடிப்பது, வயிறு வலிக்குகு பாத்ரூம் போக வேண்டும் என்பதே என ஊர் மக்களை வைத்தே அத்தனை யதார்த்தமாக எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த பயணத்தில் சூரி கோவப்பட்டு அண்ணபென்-யை அடிக்க எகிறும் காட்சி ஸ்கிரீனை தாண்டி மேலே கைப்பட்டுவிடும் போல, சூரி நடிகனாக மீண்டும் உச்சம் தொடுகிறார். ஒரு கால் கட்டப்பட்ட சேவல், அதிலிருந்து அப்படியே அண்ணபென் கதாபாத்திதத்தை காட்டிய மெட்டபர் ரசிக்க வைக்கின்றது, அதிலும் பின்னணி இசை இல்லாமல் படத்தை நகர்த்தியது எதோ நாமே அந்த ஷேர் ஆட்டோவில் பயணித்த அனுபவம்.
என்ன இத்தனை யதார்த்த களம் ஜெனரல் ஆடியம்ஸுக்கு செட் ஆகுமா என்றால் கேள்விக்குறி தான், கருடனை மனதில் வைத்து வருபவர்களுக்கான படம் இது இல்லை.
க்ளாப்ஸ்
படத்தின் டெக்னிக்கல் விஷயத்தில், குறிப்பாக ஒளிப்பதிவு
படத்தில் நடித்த அனைத்து நடிகர் , நடிகைகள் பங்களிப்பு.
பல்ப்ஸ்
ஜெனரல் ஆடியன்ஸுக்கான படமில்லை, அதிலும் கிளைமேக்ஸ் ரசிகர்கள் பார்வையில் விட்டாலும் சிலருக்கு ஏமாற்றம் தான்.
மொத்தத்தில் கொட்டுக்காளி வினோத் ராஜின் மற்றொரு மகுடம், ஆனால் இந்த மகுடம் கமர்ஷியல் படங்களை பார்ப்பவர்களுக்கு இல்லை.
Rating - 3.25/5