கஷ்டத்தில் தனுஷ் பட நடிகர்!! ஓடி சென்று உதவிய KPY பாலா.. என்ன ஆனது?
அபிநய்
தனுஷின் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அபிநய். இந்த படத்தில் தனுஷின் நண்பராக அபிநய் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழில் சில படங்கள் நடித்த இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது, இவர் 'லிவர் சிரோசிஸ்' என்ற கல்லீரல் தொடர்பான கடுமையான நோய் ஒன்றில் அவதி பட்டு வருகிறார்.
இந்த நோயில் இருந்து மீள அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அபிநய்க்கு ரூ. 28 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக, சினிமா நண்பர்களிடம் உதவிக் கோரி இருந்தார் அபிநய்.
என்ன ஆனது?
இந்நிலையில், கலக்கப்போவது யாரு பாலா நேராக அபிநய்யின் வீட்டுக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்து ரூ. 1 லட்சம் நிதியுதவி கொடுத்திருக்கிறார்.
ஒரு காலத்துல சாக்லேட் பாயா இருந்தான். காலம்தான் எவ்ளோ கொடுமையானது. 😤 pic.twitter.com/428W3uQchp
— முகில் (@mukil1123) August 1, 2025

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
