உதவி செய்வது குறித்து வந்த குற்றச்சாட்டுக்கள், KPY பாலா கொடுத்த பதிலடி
KPY பாலா
தமிழ் சின்னத்திரையில் தனது திறமையால் நுழைந்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக இருப்பவர் பாலா.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது, அதில் ஒருவராக பாலா உள்ளார். ரைமிங், டைமிங் காமெடிகள் செய்து அசத்தி வந்தவருக்கு அதிகம் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ
கோமாளியாக பாலா செய்த கலாட்டா எல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் தனியார் நிகழ்ச்சிகளிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தான் வருகிறார், குக் வித் கோமாளி பக்கம் வருவதில்லை.
தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கிவிட்டார்.
பதிலடி
பாலா தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மற்றவர்களுக்கு உதவ கொடுத்து வருகிறார்.
அவர் இப்படி செய்வதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள், அவர் வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸில் எல்லாம் முறைகேடு உள்ளது என நிறைய குற்றச்சாட்டு எழும்பியது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாலா சமீபத்திய ஒரு பேட்டியில், நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன்.
என்னுடைய வேலையே என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். அது தொடர்ந்து கொண்டே இருக்கும், முடிவே இல்லை. என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.