மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை சொன்ன ஒரு வார்த்தைக்காக கடந்த சில எபிசோடுகளாக டாக்டர் பட்டம் வாங்க விஜயா என்னவெல்லாம் செய்தார் என்பதை பார்த்துக்கொண்டு தான் வருகிறோம்.
அவரது பிளானை தெரிந்துகொண்ட முத்து அது எப்படி தவறானவருக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும் என அவர் பிளான் போட்டு விஜயா முகத்திரையை கிழிக்கிறார்.
பிச்சைக்காரனை விஜயா நடத்தியதையும், படிப்புக்கு உதவி கேட்டு வந்த பெண்ணை அவர் திட்டி அனுப்பியதையும் வீடியோ எடுத்து காட்டி டாக்டர் பட்டம் கிடைக்காமல் செய்துவிட்டார்.
அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்த விஜயாவை அண்ணாமலை திட்டிவிடுகிறார். விஜயா இதற்கெல்லாம் நீ தான் காரணம் என மீனாவை திட்டிவிட்டு செல்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் விஜயா டாக்டர் பட்ட கலாட்டாவுடன் ஒளிபரப்பாக இன்னொரு விஷயமும் நடக்கிறது.
அதாவது மனோஜின் பார்க் நண்பர் கடை பிரச்சனைக்கு இதுதான் ஒரு தீர்வு என மனோஜை அனுப்பி வைக்கிறார். அவரும் தன்னை ஏமாற்றி பெண்ணின் வீட்டிற்கு செல்ல அப்புறம் தான் கலாட்டாவே நடக்கிறது.
அவரது வீட்டில் சில பெண்கள் துடைப்பக்கட்டையால் மனோஜை வெளுத்து வாங்குகிறார்கள். இதோ புதிய புரொமோ,