க்ரித்தி ஷெட்டியின் அரபிக் குத்து! வீடியோ வைரல், லட்சக்கணக்கில் லைக்ஸ்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. அதனை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாடல் ஜாலியோ ஜிம்கானா அதன் சாதனையை நெருங்க முடியவில்லை.
225 மில்லியன் பார்வைகள்
தற்போது வரை அரபிக் குத்து பாடல் 225 மில்லியன் பார்வைகளை பெற்று இருக்கிறது. இவ்வளவு விரைவாக அரபிக் குத்து 200M என்ற மைல்கல்லை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரபிக் குத்து பாடலில் விஜய் ஆடும் டான்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழ் நடிகர்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரும் அரபிக் குத்து பாட்டுக்கு ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

க்ரித்தி ஷெட்டி டான்ஸ்
தெலுங்கு சினிமாவில் அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருக்கும் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் படு வைரல் ஆகி கொண்டிருக்கிறது. அவரது டான்ஸ் வீடியோவை ஒருமணி நேரத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் லைக் செய்து இருக்கின்றனர்.
வீடியோ இதோ..
தியேட்டருக்கு நிஜ துப்பாக்கியுடன் வந்த நபர் கைது! லாக்கப்பில் ஆர்ஆர்ஆர் ரசிகர்