சூர்யாவுக்காக மிகப்பெரிய வாய்ப்பை நிராகரித்த க்ரித்தி ஷெட்டி!
தெலுங்கில் உப்பேனா படத்தின் மூலாக பாப்புலர் ஆனவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. அவருக்கு தற்போது 18 வயது மட்டுமே ஆகிறது.
க்ரித்தி ஷெட்டி
தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவர் தற்போது அறிமுகம் ஆகி இருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் அவர் வாரியர் படத்தில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து அடுத்து க்ரித்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

ஹிந்தி படத்தை நிராகரித்தார்
இந்நிலையில் தற்போது க்ரித்தி ஷெட்டி தனது தெலுங்கு படம் ஒன்றின் விழாவில் பேசும்போது தனக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது என்றும், அதை நிராகரித்துவிட்டேன் எனவும் கூறி இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல கதைகளில் நடிக்க மட்டுமே விரும்புவதாக அவர் கூறி இருக்கிறார். மிக இளம் வயதில் அவருக்கு மற்ற சினிமா துறைகளில் இருந்தும் அதிகம் பட வாய்ப்புகள் வருவது அவரது கெரியர் வளர்ச்சியை காட்டுவதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரே ஒரு சமுக வலைதள பதிவின் மூலம் கோடிக்கணக்கில் சம்பளம் ஈட்டும் நடிகை அலியா பட் ! 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    