பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு இது தான் நிலை.. கீர்த்தி சனோன் வேதனை
க்ரித்தி சனோன்
பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது தான் நிலை!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமா குறித்து பேசியுள்ளார். பாலிவுட் சினிமாவில் நடிகர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வருவதற்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்கிறோம். இங்கு சமநிலை என்பதே கிடையாது. நடிகர்களுக்கு அட்டகாசமான அறைகளையும், சொகுசு கார்களையும் படக்குழுவினர் ஏற்படுத்தி தருவார்கள்.
விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் நடிகைகளை கண்டு கொள்வதில்லை" என்று தெரிவித்துள்ளார்.