பாகுபலி நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ள தயாரான 32 வயது நடிகை.. யார் தெரியுமா
நடிகர் பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, அதன்பின் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.
முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் பிரபாஸுக்கு மார்க்கெட்டை ஓபன் செய்தது.
பாகுபலி படத்திற்கு பின் இவர் நடித்து வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் தற்போது ஆதிபுருஷ், சாலர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திருமணம் செய்துகொள்ள தயார்
இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து பல விமர்சனங்களில் சிக்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அவரை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் நடிகை கிருத்தி சனோன். இவருடைய இந்த பேச்சு தற்போது ஊடகங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
