காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் நாள் சென்னை வசூல்- எவ்வளவு தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் டீஸர், பாடல்களே மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது, அதிலும் நயன்தாரா-சமந்தா என இரண்டு முன்னணி நடிகைகள் இதில் நடிப்பது படத்திற்கு இன்னொரு சிறப்பு.
நேற்று படம் வெளியாக ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

சென்னை பாக்ஸ் ஆபிஸ்
நேற்று விக்னேஷ் சிவன் படம் ரிலீஸ் ஆக நன்றாக வெற்றிப்பெற வேண்டும் என அவர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இன்னொரு பக்கம் சமந்தா தனது பிறந்தநாளை தனக்காக பணிபுரிபவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.
தற்போது இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 66 லட்சம் வசூலித்துள்ளது. இது படத்திற்கான நல்ல தொடக்க வசூல் என்கின்றனர்.
2022ன் படி வசூலில் விஜய்யின் பீஸ்ட் செய்துள்ள சாதனைகள் என்னென்ன- முழு விவரம்