தமிழகத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட முதல் நாள் வசூல் விவரம்- அட செம வசூல்
லவ் டிராக் என்றாலே விக்னேஷ் சிவனுக்கு கை வந்த கலை தான். அதிலும் காதலியாக நயன்தாரா வேறு கிடைத்துள்ளார், அப்படியே காதல் கனவுகள் பொங்கி இருக்கும்.
அவர் இரண்டு பெரிய நாயகிகள் நயன்தாரா மற்றும் சமந்தாவை, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமைத்து செம படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல், டீஸர், டிரைலர் எல்லாமே மக்களிடம் செம ரீச்.
படத்தின் வசூல்
படத்திற்கு மக்களிடம் குட் ரெஸ்பான்ஸ், முதல் நாளில் சென்னையில் மட்டுமே படம் ரூ. 66 லட்சம் வசூலித்தது, இது நல்ல தொடக்கம் தான் என்றனர்.
அதேபோல் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 5.20 கோடி வசூலித்துள்ளதாம். வரும் நாட்களின் புக்கிங்கும் படத்திற்கு அமர்க்களமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் பெரும் நஷ்டத்துடன் முடிந்த விஜய்யின் பீஸ்ட்- மொத்த வசூல் விவரம்