நாட்டாமை படத்தை இயக்க இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
நாட்டாமை
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நாட்டாமை.
இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் சரத்குமார். மேலும் குஷ்பூ, மீனா, பொன்னம்பலம், சங்கவி, பாண்டு, கவுண்டமணி, செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.
இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் படங்களில் கூட ரஜினிகாந்த் நாட்டாமை விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் சம்பளம்
இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தை இயக்க ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கவுண்டமணியா இது, எந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க- முதன்முறையாக வெளிவந்த போட்டோ