தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா! அடேங்கப்பா இத்தனை கோடியா
குபேரா
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜூன் 20ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.

பட்ஜெட்
இந்த நிலையில், தனுஷின் குபேரா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri