மருது பட விஷாலின் பாட்டி இறந்துவிட்டாரா? யுடியூபில் பரவிய செய்தியால் அனைவரும் ஷாக்
விஷாலின் மருது படத்தில் அவரது பாட்டியாக நடித்து இருந்தவர் குள்ளப்புள்ளி லீலா. அவர் அதற்கு முன்பு முத்து, அரண்மனை 3, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். கேரளாவை சேர்ந்த அவர் எக்கச்சக்க மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
குள்ளப்புள்ளி லீலா சமீபத்தில் இறந்துவிட்டார் என youtubeல் செய்தி பரவியது. அதை பார்த்து பலரும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அந்த செய்தி லீலாவுக்கே சென்றபோது கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். காரணம் அவர் உயிரோடு இருக்கும்போதே யாரோ வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.

இதை பார்த்துவிட்டு பலரும் தனக்கு போன் செய்து விசாரிப்பதாகவும், சிலர் பணம் சம்பாதிக்க இப்படி பொய்யான செய்தியை பரப்பி இருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளார்.
அடுத்தவர்களை கொன்று பணம் சம்பாதிக்காதீர்கள் என அவர் காட்டமாக பேசி இருக்கிறார்.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan