குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது உண்மையா?- குரேஷி போட்ட பதிவு
குக் வித் கோமாளி
பிக்பாஸை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி 4. முதல் சீசனிற்கு மக்களால் கொடுக்கப்பட்ட வெற்றி தான் இப்போது 4வது சீசன் வரை வந்துள்ளது.
முதல் 2 சீசன் தான் பெரிய அளவில் ரீச் என்றே கூறலாம்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கலக்கி வருகிறார்கள்.
சோகமான விஷயம்
ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இருந்து கோமாளி மணிமேகலை விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து இன்னொரு கோமாளியான குரேஷியும் வெளியேறுகிறார் என செய்தி பரவின.
தற்போது குரேஷி இந்த வதந்திகளுக்கு பதில் தரும் விதமாக, இன்ஸ்டா ஸ்டோரியில் கண்டிப்பாக குக் வித் கோமாளியை விட்டு போகமாட்டேன் என பதிவு செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் சதீஷா இது, தாடி, மீசை என ஆளே அடையாளமே தெரியலையே?- செம லுக்