88 வயதாகும் தனது மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய குஷ்பூ.. அப்படி நடக்கவில்லை என்றால் ஆவியாக வருவேன் என்று கூறினாராம்
நடிகை குஷ்பூ
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ . இவர் 1980ல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
இவர் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து புகழ் பெற்று விளங்கினார். பின்னர் இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தன் கணவர் நடிக்கும் படங்களை "அவ்னி சினிமாக்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய குஷ்பூ
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியை சந்தித்ததை பற்றி கூறியுள்ளார்.
அதில், "என்னுடைய மாமியார் தோனியின் மிகப்பெரிய ரசிகை. அவருக்கு 88 வயது ஆகிறது. அவரின் வாழ்வு முடிவதற்குள் தோனியை பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டர். மேலும், என்னிடம் தோனியை பார்க்காமல் நான் இறந்துவிட்டால் ஆவியாக வந்து உன்னை தொந்தரவு செய்வேன் என்றார். அவரின் ஆசை எனக்கு நன்றாக புரிந்தது”.
நான் இந்த சந்திப்புக்காக 3 ஆண்டுகள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தான் அது நடந்தது. என்னுடைய அத்தையை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு தோனியை சந்தித்தோம். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு" என நடிகை குஷ்பூ தெரிவித்திருந்தார்.
ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் வீடியோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
