பாடகியுடன் திருமணத்திற்கு வந்த ரவி மோகன்.. ஆர்த்திக்கு துணை நிற்கும் குஷ்பூ, ராதிகா..
ரவி மோகன் - ஆர்த்தி
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமே கோரிய நிலையில், ஆர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில் ரவி மோகன் பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறினார்கள்.
குஷ்பூ, ராதிகா பதிவு
இந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் கிசுகிசுக்கப்பட்ட பாடகியுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதன்பின் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து கடும் கோபத்துடன் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது பிரபல நடிகைகள் குஷ்பூ மற்றும் ராதிகா ஆகியோர் தங்களது ஆதரவை ஆர்த்திக்கு தெரிவித்து வருகிறார்கள்.
— Radikaa Sarathkumar (@realradikaa) May 9, 2025
A mother. ❤️ https://t.co/PsMvNkh4ev
— KhushbuSundar (@khushsundar) May 10, 2025