அதெல்லாம் ஒரு பாடலா? சமந்தாவின் ஹிட் பாடலை கழுவி ஊற்றிய பிரபல பாடகி
இந்திய சினிமாவின் பிரபல பாடகியாக இருப்பவர் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் தமிழ் மொழியைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, துளு போன்ற அனைத்து மொழிகளிலும் பாடல் பாடியுள்ளார்.
இவர் சினிமா பாடல்கள் மட்டுமின்றி நிறைய பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கென பல ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அதெல்லாம் ஒரு பாடலா?
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எல்.ஆர்.ஈஸ்வரி ," தற்போதைய காலகட்டத்தில் வரும் பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை. நான் சினிமாவில் கோரஸ் பாடல்கள் பாடி தான் சினிமாவில் வந்தேன்".
"சமீபத்தில் நான் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? பாடல் தொடக்கத்திலிருந்து முடியும் வரை ஒரே மாதிரி தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
படுமோசமான நடிகர் சந்தானத்தின் மார்க்கெட், இப்படியொரு சரிவா