படுமோசமான நடிகர் சந்தானத்தின் மார்க்கெட், இப்படியொரு சரிவா
சந்தானத்தின் மார்க்கெட்
முதலில் காமெடி நடிகராக களமிறங்கி பின் ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் குளு குளு.
ரத்தன்குமார் இயக்கிய இப்படம் சன் தொலைக்காட்சி ரூ. 8.5 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது. இப்படம் தோல்வியடைந்ததால் சந்தானத்தின் மார்க்கெட் மோசமான சரிவை சந்தித்துள்ளதாம்.
இப்படியொரு சரிவா
இதனால் அடுத்தடுத்து வெளியாகவுள்ள சந்தானம் படங்களின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை வாங்குவதற்கு எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிலையிலும் சாட்டிலைட் உரிமையை வாங்க வருபவர்கள் ரூ. 2 கோடிக்கு விலை பேசுகிறார்கள் என கூறப்படுகிறது.
இப்படியொரு நிலைமையில் தான் தற்போது சந்தானத்தின் மார்க்கெட் உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா! உண்மை இதுதான்