என்னிடம் இருந்து விஜய் தப்பிவிட்டார்.. ஏன் இப்படி சொன்னார் நடிகை லைலா?
விஜய்
நடிகர் விஜய்க்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறினார்கள்.
விஜய் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பல பிரபலங்களும் வெளியிட்டு இருந்தனர்.
லைலாவின் பதிவு
நடிகை லைலாவும் விஜய்க்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டு இருக்கிறார். உன்னை நினைத்து படத்தில் விஜய் மற்றும் லைலா இருவரும் ஜோடியாக நடித்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து விஜய் திடீரென வெளியேறிவிட்டதால் அதன் பின் சூர்யா அதில் ஹீரோவாக நடித்தார்.
அதனால் விஜய் என்னிடம் இருந்து தப்பிவிட்டார் என லைலா குறிப்பிட்டு, உன்னை நினைத்து படத்தில் அவருடன் இருக்கும் போட்டோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.
சொந்த ஊரில் நடிகை தேவயானி கட்டியுள்ள பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகாக உள்ளதே