16 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கவரும் நடிகை லைலா.. அதுவும் இந்த முன்னணி நடிகரின் படத்தில்
நடிகை லைலா
தமிழில் நந்தா,பிதாமகன், தீனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.
இவர் 1996-ல் தெலுங்கில் வெளியான ஏகிரே பாவுரமா படத்தில் தான் முதல் முறையாக நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் ஒரு சில ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் படங்களில் பெரும்பாலாக நடிக்காமல் இருந்துவந்த லைலா தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

சினிமாவில் ரீ என்ட்ரி
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த லைலா, தற்போது மீண்டும் 16 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லைலா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் குழந்தைக்கு பெயரை அறிவித்த ஆல்யா சஞ்சீவ் ஜோடி! குவியும் வாழ்த்து
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
திமுக மீது விமர்சனம் இருந்தாலும் கூட்டணியில் தொடர காரணம் இதுதான் - திருமாவளவன் விளக்கம் IBC Tamilnadu