சந்திரமுகியாக நடிப்பது இவரா? லாரன்ஸின் சந்திரமுகி 2 பற்றி கசிந்த அப்டேட்
சந்திரமுகி 2
சூப்பர்ஸ்டார் ரஜினி, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கி வருகிறார். அதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இரண்டாம் பாகத்தின் கதை சந்திரமுகி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு புது கதையாக இருக்கும் என இயக்குனர் முன்பே கூறி இருக்கிறார்.
சந்திரமுகி இவரா?
சந்திரமுகியில் ஜோதிகா தான் சந்திரமுகியாக நடித்து மிரட்டி இருப்பார். அது போல இரண்டாம் பாகத்தில் யார் சந்திரமுகியாக நடிப்பது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அது பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து வருகிறாராம், அவரது காட்சிகள் எல்லாம் பிளாஷ்பேக்கில் தான் வரும் என கூறப்படுகிறது.
அதனால் ஜோதிகாவுக்கு இணையாக தனக்கும் சந்திரமுகி ரோலில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என லட்சுமி மேனன் நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் புது ஐஸ்வர்யா.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
