லால் சலாம் படத்தின் ப்ரீ புக்கிங் மட்டும் இவ்ளோவா?..எத்தனை கோடி தெரியுமா..
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

ப்ரீ புக்கிங்
சமீபத்தில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்களை வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் உலக அளவில் ரூபாய் 2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
