லியோ இண்டர்வல் சீன் இப்படி தான் இருக்கும்.. தயாரிப்பாளர் கூறிய மாஸ் அப்டேட்
லியோ
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்து வருகிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து திரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் லியோ படம் குறித்தும், இண்டர்வல் காட்சி குறித்தும் சூப்பர் அப்டேட் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது
"படம் சூப்பரா வந்துருக்கு. படத்தின் இண்டர்வல் கண்டிப்பாக அனைவரும் Goosebumps moment-ஆக இருக்கும். இந்த இண்டர்வல் காட்சி மொத்தம் 8 நிமிடம். கண்டிப்பாக அதை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்" என கூறியுள்ளார்.
லியோ குறித்து தயாரிப்பாளர் கூறியுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ