மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ
திரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும். 13 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் தான விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.
லியோ படத்திற்கு பின் அஜித்துடன் கைகோர்த்து விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்கப்போவதாக தகவல் கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார்.
திருமண கோலத்தில் திரிஷா
அந்த வகையில் தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவிற்கும் கல்யாணமா என கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், திரிஷாவின் திருமணம் அல்ல, அது நகை கடை விளம்பரம் என அதன்பின் தான் தெரியவந்தது.
தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ