பாகுபலி வில்லன் மீது கிரிமினல் வழக்கு! நேரில் ஆஜராக சம்மன்

By Parthiban.A Feb 12, 2023 10:30 AM GMT
Report

ராணா

டோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ராணா. அவர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். கடந்த வருடம் அவரது நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது.

ராணாவின் அப்பா சுரேஷ் பாபு ஒரு பிரபல தயாரிப்பாளர் தான். அவர் பல முக்கிய படங்களை தயாரித்து இருக்கிறார்.

பாகுபலி வில்லன் மீது கிரிமினல் வழக்கு! நேரில் ஆஜராக சம்மன் | Land Grabbing Case Against Rana Daggubati

நில அபகரிப்பு வழக்கு

தற்போது ராணா மற்றும் அவரது அப்பா சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் நிலத்தை அபகரிக்க பார்ப்பதாக பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்.

Film Nagar Cooperative Societyல் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறும்படி ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி ராணாவுக்கு அவரது அப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. 

பாகுபலி வில்லன் மீது கிரிமினல் வழக்கு! நேரில் ஆஜராக சம்மன் | Land Grabbing Case Against Rana Daggubati

நடிகர் முரளியின் மகன்களை தெரியும், மகளை பார்த்திருக்கிறீர்களா? போட்டோ இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US