மறைந்த நடிகர் மாரிமுத்து இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்வளவு?- Net Worth விவரம்
நடிகர் மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பவே முடியாத ஒரு பிரபலத்தின் மரணம்.
காலையில் நன்றாக டப்பிங் பேசி இருந்தவர் திடீரென மூச்சுவிட கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார், ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மரணத்தை தமிழக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, இப்போதும் மக்கள் அவரது வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்க கூடாது என கஷ்டப்பட்டு வருகின்றனர்.
பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் எதிர்நீச்சல் தொடர் தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் மூலம் அவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க பட வாய்ப்புகளும் குவிந்தன.
ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என பிஸியாக நடித்து வந்துள்ளார்.
சொத்து மதிப்பு
மாரிமுத்து பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் இப்போது தான் கொஞ்சம் ரீச் பெற்றார். அப்படி இதுவரை அவர் சேர்த்து வைத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது. உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ரூ. 1500 சம்பளம் பெற்றுள்ளார்.
மாரிமுத்துவின் ஆரம்ப கால கஷ்டத்தை அறிந்து அவரின் மகன் படிப்பு செலவுக்கு உதவியது கூட அஜித் தான் என்பதை மாரிமுத்து, பேட்டி ஒன்றியிலும் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் முதலில் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ. 40 முதல் ரூ. 50 ஆயிரம் வரை 1 நாளைக்கு சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
இவர் தனது கனவு இல்லத்தை சில கோடி செலவு செய்து வாங்கியுள்ளார், ஒரு கார் ஒன்றை வைத்துள்ளார். இதை தவிர சில லட்சம் மட்டுமே இவரின் பேங்க பேலன்சில் உள்ளதாம்.