பட வாய்ப்பு கிடைக்கவில்லை, விஜய் டிவி சீரியலில் நடிக்க வந்துள்ள மயில்சாமி மகன்- எந்த தொடர் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
மயில்சாமி
தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் உள்ளார்கள், அவர்களில் ஒருவராக இருப்பவர் தான் மயில்சாமி.
இவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்துள்ளார். விஜயகாந்த் போல இவரும் ஏழை, எளிய மக்களுக்கும், தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.
தன்னால் முடியவில்லை என்ற நேரத்தில் மற்றவர்களிடம் கடன் வாங்கி உதவி செய்திருக்கிறார், இதனை சாலிகிராமம் மக்கள் பலரும் கூறியுள்ளார்கள்.
இவருக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர், இருவரையும் நடிகராக பார்க்க மயில்சாமி அதிகம் ஆசைப்பட்டார்.
அன்பு நடிப்பில் முதன்முதலாக 2002ம் ஆண்டு அல்டி என்ற படம் வெளியாகி இருந்தது, அதன்பிறகு 2021ம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
யுவன் சீரியல் என்ட்ரி
மயில்சாமியின் இரண்டாவது மகனும் கிடைக்கும் படங்களில் நடித்தாலும் சரியான வெற்றி கிடைக்கவில்லை, தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
யுவன் மயில்சாமி நடிக்க உள்ள சீரியலுக்கு தங்கமகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் யுவனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் புகழ் அஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறாராம்.
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரின் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறதாம்.