ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சைரன்
முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏற்கனவே கோமாளி படத்தில் ஹிட் காம்போ என நிரூபித்த ஜெயம் ரவி - யோகி பாபு கூட்டணி இப்படத்தில் இணைந்தது.

வசூல் விவரம்
மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், சைரன் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எதிர்பார்த்ததை விட இது குறைவான வசூல் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இனி வரும் நாட்களில் சைரன் திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan