பிரம்மாண்ட செட், புரொமோ ஷுட், ஃபஸ்ட் லுக் எல்லாம் எப்போது?- பிக்பாஸ் அப்டேட்
பிக்பாஸ் 8
பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் பெரிய அளவில் ரீச் பெற்ற ஒரு நிகழ்ச்சி.
பாலிவுட் சின்னத்திரையின் பிக்பாஸ் பிரம்மாண்டமாக ஓடிய தாக்கம் கடந்த 2017ம் ஆண்டு முதல் சீசன் தமிழில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதற்குள் எல்லா பிரச்சனையும் முடிந்தது.
முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுதது சீசன்கள் ஒளிபரப்பாகி கடைசியாக 7வது சீசன் வரை முடிந்துள்ளது. விரைவில் 8வது சீசன் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

8வது சீசன்
முதல் 5 சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவார் என்ற ஒப்புதலுடன் தான் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது.
பின் 6, 7 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கி கலக்கினார். தற்போது பிக்பாஸ் குழுவினர் சமீபத்தில் 8வது சீசனிற்காக கமல்ஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் அவர்களும் 8வது சீசனிற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். புரொமோ ஷுட் தொடங்கும் நாள், நிகழ்ச்சி ஆரம்பம் என எல்லா விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாம்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஃபஸ்ட் லுக் வெளியாகலாம் என தகவல்கள் வருகின்றன.

ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri