ரஜினியுடன் இணைந்து லதா ரஜினிகாந்த் நடித்துள்ள ஒரே திரைப்படம் எது தெரியுமா?
நடிகர் ரஜினி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த்.
74 வயதிலும் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆக்டீவாக உள்ளார். இவரது நடிப்பில் கூலி, ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது, இதில் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.
லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்துக்கு 1981ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் லதா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். லதா ரஜினிகாந்துக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் அதிகம், இவர் கோச்சடையான் படத்தில் பாடி இருந்தார்.
ஆனால் இவர் ஒரு படத்தில் நடிகர் ரஜினியின் மனைவியாகவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார், எந்த படம் தெரியுமா? கடந்த 1982ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவக்குமார் மற்றும் சரிதா நடிக்க அக்னி சாட்சி என்ற படம் வெளியானது.
இதில் ரஜினிகாந்த், ரஜினியாகவே கேமியோ ரோலில் நடித்திருப்பார், அதோடு ரஜினியின் மனைவியாக லதா ஒரு காட்சியில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.