23 கோடி செலவில் உருவான விஷாலின் லத்தி நஷ்டத்தில் முடிந்ததா?- இதுவரை இவ்வளவு தான் வசூலா?
விஷாலின் லத்தி
நந்தா ராணா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் தான் லத்தி. இதில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த், வினோத்சாகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படத்தின் சண்டைகாட்சியில் பல முறை விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடமை தவறாத காவலரான விஷால், பாலியல் குற்றவாளி என்ற சந்தேகப்பட்டு ஒரு இளையரை லத்தியால் கடுமையாக அடிக்கிறார்.
இதனால் சஸ்பென்ட் ஆன விஷால் மீண்டும் சிபாரிசால் வேலைக்கு வருகிறார். அதன்பின் லத்தியை தொடவே மாட்டேன் என சபதம் எடுக்கும் விஷால் கடைசியில் லத்தியை எடுத்தாரா இல்லையா என்பது தான் கதை.
பட வசூல்
ரூ. 23 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ. 3.40 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் படம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
Theatrical வசூல் பொறுத்த வரை நஷ்டம் என்றாலும் விஷால் சாட்டிலைட், டப்பிங் போன்ற வியாபாரத்தில் படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
