வாரிசு நடிகருடன் லாவண்யா திரிபாதி திருமணம்? சர்ச்சைக்கு விளக்கம்
காதல் கிசுகிசுவுக்கு நடிகை லாவண்யா திரிபாதி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
லாவண்யா திரிபாதி
சசிக்குமாரின் பிரம்மன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லாவண்யா திரிபாதி. அவர் அதற்கு பிறகு தெலுங்கு படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
அவர் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் உடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக டோலிவுட்டில் செய்தி வெளியாகி வருகிறது. விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் நேற்று தகவல் பரவியது.
நடிகை விளக்கம்
சிரஞ்சீவியின் தம்பி மகன் தான் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வாரிசு நடிகரை லாவண்யா காதலித்து அவருடன் வசித்து வருகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது லாவண்யா இதுபற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இரண்டு படங்களில் அவருடன் நடித்ததால் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் எனவும், அதில் துளியும் உண்மை இல்லை என நடிகை கூறி இருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு பிடிக்காத நடிகர்கள்.. பேட்டியில் கூறிய தளபதி விஜய்

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
