2 நாட்களில் லீடர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
துரை செந்தில் குமார்
எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில் குமார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கி வந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இவர் இயக்கிய கடைசி படம் வரவேற்பை பெறவில்லை.

இதன்பின், கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த கருடன் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். இப்படம் பட்டிதொட்டி எங்கும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கருடன் வெற்றியை தொடர்ந்து லெஜண்ட் சரவணனுடன் லீடர் என்கிற படத்திற்காக கைகோர்த்தார். இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
லீடர் வசூல்
கடந்த 3ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என லீடர் படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லீடர் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri