ஆஸ்கர் புகழ் "லீ சுன் கியுன்" மர்ம மரணம்!! பேர் அதிர்ச்சியில் திரையுலகம்..
லீ சுன் கியுன்
பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ’பாரசைட்’.
இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் எனப் பல பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடிகர் லீ சுன் கியுன் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
மரணம்
தற்போது 48 வயதாகும் லீ, இன்று சியோல் நகரில் உள்ள ஒரு பூங்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
லீ சுன் கியுன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் லீ சுன் கியுன் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.